தொழிலாளர்கள் தங்கள் பணியிடங்களுக்கு செல்வதற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட நடவடிக்கை-அனுராக்சிங் தாக்கூர்

0 600

தொழிலாளர்கள் தங்கள் பணியிடங்களுக்கு செல்வதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதி துறை இணை அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் உறுதி அளித்தார்.

தொழில்துறையில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னை குறித்து அனுராக் சிங் தாக்கூரிடம் பாரத் சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் சார்பில் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. பின்னர் பேசிய அமைச்சர், தொழிலாளர்கள் தங்கள் பணியிடங்களுக்கு திரும்பும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

முன்னதாக அனுராக் சிங் தாக்கூர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பாரத் சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது ஊரடங்கு காலத்தில் வீடு திரும்பிய தொழிலாளர்களுடன் தொழில்துறையினர் தொடர்பில் இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments