குல்காமில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

0 1003
குல்காமில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் பகுதியில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குல்காமின் வான்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அப்பகுதியை சுற்றிவளைத்து ராணுவ வீரர்களும், சிஆர்பிஎப் வீரர்களும் கூட்டாக தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இந்தச் சண்டையின் முடிவில் 2 பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்கள் சடலங்கள் அருகில் கிடந்த ஏராளமான ஆயுதங்களும் பாதுகாப்புப் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. 2 பயங்கரவாதிகளும் எந்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments