இந்தியாவில் பாதிப்பு 1.65 லட்சத்தை தாண்டியது...

0 952
இந்தியாவில் பாதிப்பு 1.65 லட்சத்தை தாண்டியது...

நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா தொற்றால் ஒரே நாளில் 7 ஆயிரத்து 466 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அந்த தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 65 ஆயிரத்தை (165799) தாண்டியுள்ளது. கொரோனா தொற்றால் நாளுக்கு நாள் இந்தியாவில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 7 ஆயிரத்து 466 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 175 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனா பரவத் தொடங்கியது முதல் இதுவே மிகவும் அதிகபட்ச பாதிப்பு என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 65 ஆயிரத்து 799ஆக அதிகரித்துள்ளது. அந்த தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 4 ஆயிரத்து 706ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 89 ஆயிரத்து 987 பேர் சிகிச்சை பெறும் நிலையில், 71 ஆயிரத்து 106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

 கொரோனா மையமாக திகழும் மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 59 ஆயிரத்து 546ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்து 982ஆகவும் ((1982)) உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 372ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 145ஆகவும் அதிகரித்துள்ளது. 3ம் இடத்துக்கு முன்னேறியுள்ள டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 281ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 316ஆக பதிவாகியுள்ளது.

4ம் இடத்திலுள்ள குஜராத்தில் 15 ஆயிரத்து 562 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 960 பேர் உயிரிழந்துள்ளனர். 5ம் இடத்திலுள்ள ராஜஸ்தானில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளது. மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மாநிலங்களில் 7 ஆயிரத்தையும், மேற்குவங்கத்தில் 4 ஆயிரத்தையும், ஆந்திரா, பீகாரில் 3 ஆயிரத்தையும், ஜம்மு- காஷ்மீர், கர்நாடகா, பஞ்சாப், தெலுங்கானாவில் 2 ஆயிரத்தையும் பாதிப்பு தாண்டியுள்ளது. ஓடிசா, கேரளா, ஹரியாணா ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments