முகக்கவசம் அணிவதால் லிப்ஸ்டிக் விற்பனை சரிவு

0 1096

மூக்கு, வாயை மூடும் வகையில் முகக் கவசம் அணியும் நிலையால், லிப்ஸ்டிக் விற்பனை சரிந்து, கண் அலங்காரப் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பது, வீட்டில் இருந்தே பணியாற்றுவது, பொதுவெளியிலும், அலுவலகங்களிலும் மாஸ்க் அணிய வேண்டியிருப்பது போன்ற காரணங்களால், லிப்ஸ்டிக் பயன்படுத்துவதை விட, மஸ்கரா, ஐலைனர் போன்றவற்றில் நுகர்வோர் அதிகம் கவனம் செலுத்துவதாக அழகுசாதனப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

அழகுசாதனப் பொருட்கள் சந்தையில் ஐஷேடோ, டாப் 5 என்ற நிலையில் இருந்து டாப் 3 நிலைக்கு முன்னேறியுள்ளது. இதற்கேற்ப, கண் தொடர்பான அலங்காரப் பொருட்கள் தயாரிப்பு, விற்பனையில் அதிக கவனம் செலுத்துவதாக அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments