ஹாங்காங்கின் தன்னாட்சி பறிக்கப்பட்டால் அதற்கான சலுகைகள் நிறுத்தப்படும்-மைக் பாம்பியோ

0 1042

ஹாங்காங்கின் தன்னாட்சி பறிக்கப்பட்டால் அதற்கு வழங்கப்படும் சிறப்புச் சலுகைகள் நிறுத்தப்படும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ எச்சரித்துள்ளார்.

ஹாங்காங் நிலவரம் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் ஹாங்காங்கில் உள்ள கள நிலவரப்படி அது நெடுங்காலத்துக்குச் சீனாவின் தன்னாட்சிப் பகுதியாக இருக்க முடியாது என அமெரிக்க நாடாளுமன்றத்துக்குத் தான் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஹாங்காங் மக்களின் பக்கம் அமெரிக்கா எப்போதும் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஹாங்காங்கின் தன்னாட்சி பறிக்கப்பட்டால் அமெரிக்காவுடன் ஏற்றுமதி வணிகம் செய்வதற்கு அதற்கு வழங்கப்படும் சலுகைகள் நிறுத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments