சென்னையின் 15 மண்டலங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு 12,203ஆக அதிகரிப்பு

0 883
சென்னையின் 15 மண்டலங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு 12,203ஆக அதிகரிப்பு

சென்னை அண்ணாநகர் மண்டலத்திலும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சென்னையின் 15 மண்டலங்களிலும் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்து 203 ஆக அதிகரித்துள்ளது. இதில் ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 252ஆக உயர்ந்துள்ளது. அதற்கடுத்து கோடம்பாக்கம் மண்டலத்தில் ஆயிரத்து 559 பேரும், திருவிக நகர் மண்டலத்தில் ஆயிரத்து 325 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் ஆயிரத்து 317 பேரும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் ஆயிரத்து 262 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து 6ஆவது மண்டலமாக அண்ணாநகர் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்து 46ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5 ஆயிரத்து 765 பேர் குணமான நிலையில், 93 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர்த்து மருத்துவமனைகளில் 6 ஆயிரத்து 252 பேர் சிகிச்சை பெறுகின்றனர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments