புதிய சட்ட மசோதாவால் ஹாங்காங்கில் பதற்றம் அதிகரிப்பு

0 847

ஹாங்காங்கில் சீனத் தேசியக் கீதத்துக்கு மதிப்பளிக்காததைக் குற்றச்செயலாக அறிவிக்கும் சட்ட மசோதாவால் பதற்றம் அதிகரித்துள்ளதால் காவல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

இதற்கான மசோதா மீதான விவாதம் ஹாங்காங் சட்டமன்றத்தில் நடைபெற்ற போது அதை எதிர்த்த ஜனநாயக ஆதரவாளர்கள் இருவர் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து நடைபெற்ற போராட்டத்தில் சீனாவின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறுவதே ஒரே வழி எனக் கூறி முழக்கமிட்ட 360 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஹாங்காங்கின் முதன்மையான இடங்களில் முன்னெச்சரிக்கையாகக் காவல்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments