மேற்குவங்க அரசு தோல்வியடைந்து விட்டதாக மத்திய அரசு கருதுமானால், மாநிலத்தில் கொரோனா பேரிடரை அமித்ஷாவே நேரடியாகக் கையாளலாம்-மம்தா பானர்ஜி

0 2894

மேற்குவங்க அரசு தோல்வியடைந்து விட்டதாக மத்திய அரசு கருதுமானால், மாநிலத்தில் கொரோனா பேரிடரை அமித்ஷாவே நேரடியாகக் கையாளலாம் என அவரிடமே கூறியதாக, முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா மேலாண்மையில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி, அமித்ஷாவே மம்தா பானர்ஜிக்கு கடிதமும் எழுதியிருந்தார். இந்நிலையில், மத்திய அரசு தொடர்ந்து மேற்குவங்கத்திற்கு குழுக்களை அனுப்புவதை அமித்ஷாவிடம் சுட்டிக்காட்டி, மாநில அரசு ஒழுங்காக வேலை செய்யவில்லை என நினைத்தால், தாங்களே நேரடியாக கொரோனா நெருக்கடியை கையாளலாம், தமக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என கூறியதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது, அதை எப்படி ஒதுக்கி வைக்க முடியும் என அமித்ஷா பதிலளித்ததாகவும், அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments