அமெரிக்காவில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 16,81,418 ஆக அதிகரிப்பு

0 1063

அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்து 81 ஆயிரத்து 418 ஆக அதிகரித்துள்ளது என்று  ஜான் ஹாப்கின்ஸ் பங்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கொரோனா மரண எண்ணிக்கை  98 ஆயிரத்து 929 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் அதிகபட்ச தொற்று நியூ யார்க் மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. இங்கு 3 லட்சத்து 63 ஆயிரத்து 836 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கை 29 ஆயிரத்து 302 ஆக உயர்ந்துள்ளது.

நியூ யார்க்கை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நியூ ஜெர்சியும், இல்லினாயிஸ், கலிபோர்னியா ஆகிய மாநிலங்கள் தலா 3 மற்றும் 4 ஆம் இடங்களிலும் உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments