சென்னை நீங்கலாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது

0 2266

12ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளது.

திருச்சி, கோவை, ராணிப்பேட்டை, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இப்பணி தொடங்கியுள்ளது. கோவை மாவட்டத்தில் கூடுதலாக 8 மையங்கள் அமைக்கப்பட்டு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் 11 மையங்களிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் 2 மையங்களிலும் பணி நடைபெறுகிறது.

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இடையே சமூக இடைவெளி கடைபிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உடல்வெப்ப அளவை பதிவு செய்ய தெர்மல் ஸ்கிரினிங் செய்யப்படுகிறது. முகக்கவசங்கள் வழங்கப்பட்டு தானியங்கி சானிடைசர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments