முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ரூ.15,128 கோடி மதிப்பில் 17 நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

0 6192
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ரூ.15,128 கோடி மதிப்பில் 17 நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், பன்னாட்டு நிறுவனங்களுடன் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.  

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கனரக வாகன உற்பத்தி, மின்னணு பொருட்கள் உற்பத்தி, காலணி உற்பத்தி, தகவல் தரவு மையம், எரிசக்தி, மருந்து பொருட்கள் உற்பத்தி என பல்வேறு துறைகளைச் சார்ந்த 17 புதிய தொழில் திட்டங்களை தமிழகத்தில் தொடங்குவதற்கான ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகின.

ஜெர்மனி, பின்லாந்து, தைவான், பிரான்ஸ், கொரியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுடன் கையெழுத்தான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 15 ஆயிரத்து 128 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 47 ஆயிரத்து 150 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் 2,277 கோடி ரூபாய் முதலீட்டில், ஜெர்மனி நாட்டை சேர்ந்த Daimler India Commercial Vehicles நிறுவனத்தின், கனரக வாகனங்கள் உற்பத்தி விரிவாக்கத் திட்டமும், 900 கோடி ரூபாய் முதலீட்டில் ஜப்பான் நாட்டை சேர்ந்த Polymatech Electronics நிறுவனத்தின் Semiconductor Chips உற்பத்தி திட்டமும் தொடங்கப்படுகிறது.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா தொலைத்தொடர்பு சிறப்பு பொருளாதார மண்டலத்தில், 1,300 கோடி முதலீட்டில் பின்லாந்து நாட்டினை சேர்ந்த சால்காம்ப் நிறுவனத்தின், கைப்பேசி உதிரி பாகங்கள் தயாரிப்பு விரிவாக்க திட்டம் தொடங்கப்படவுள்ளது.

350 கோடி ரூபாய் முதலீட்டில் தைவான் நாட்டை சேர்ந்த Chung Jye Company Limited நிறுவனம் மற்றும் Aston Shoes Pvt Ltd நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் காலணிகள் உற்பத்தி திட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், மப்பேடு பகுதியில் 400 கோடி ரூபாய் முதலீட்டில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த Lai Investment Manager Private Limited(Logos) நிறுவனத்தின் தொழிற்பூங்கா திட்டம் உள்ளிட்டவை தொடங்கப்படுகின்றன.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் 3,000 கோடி ரூபாய் முதலீட்டில், இந்திய இங்கிலாந்து கூட்டு முயற்சியா னChennai Power Generation Limited நிறுவனத்தின் இயற்கை எரிவாயு மூலம் 750 மெகாவாட் மின் உற்பத்தி திட்டமும், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், 2,000 கோடி ரூபாய் முதலீட்டில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Vivid Solaire Energy Private Limited நிறுவனத்தின் காற்றாலை மின் உற்பத்தி விரிவாக்கத் திட்டமும் துவங்கப்படவுள்ளது.

சென்னை, அம்பத்தூரில், 2,800 கோடி முதலீட்டில் HDCI Data Centre Holdings Chennai LLP எனும் அமெரிக்க நிறுவனம் சார்பிலும், சென்னையில் 1,500 கோடி முதலீட்டில் ST Tele
Media எனும் சிங்கப்பூரை சேர்ந்த நிறுவனத்தின் சார்பிலும் தகவல் தரவு மைய திட்டங்கள் துவங்கபடுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments