ஜூன் 1 முதல் கர்நாடகாவில் கோயில்கள் திறப்பு என தகவல்

0 2089

கொரோனா ஊரடங்கால் இரண்டு மாதங்களாக மூடப்பட்டுள்ள கோயில்களை வரும் ஒன்றாம் தேதி முதல் திறக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக செய்தி நிறுவனமான ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் அரசு அறிவித்துள்ள சமூக இடைவெளி, முகவுறை தரித்தல் உள்ளிட்ட கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மாநில அமைச்சர் கோட்டா ஸ்ரீநிவாஸ் பூஜாரி தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ கூறியுள்ளது.

மாநிலத்தில் 52 கோயில்களில் பூஜை நடத்துவதற்கான ஆன் லைன் புக்கிங் நாளை துவங்குவதாகவும், அனைத்து கோயில்களையும் திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் அமைச்சர் கூறியதாக ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments