அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வகம் செல்ல தேர்வாகிய செஞ்சி மாணவர்

0 1016

சர்வதேச விண்வெளி அறிவியல் போட்டியில் வெற்றி பெற்ற, விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த பொறியியல் மாணவர் ஒருவர் நாசா விண்வெளி ஆய்வு மையம் செல்வதற்காக உதவி வேண்டி காத்திருக்கிறார்.

பரணிதரன் என்ற அந்த மாணவர் விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் முதலாமாண்டு படித்து வருகிறார். கோ ஃபார் குரு (Go4Guru)என்ற அமைப்பு நடத்திய சர்வதேச விண்வெளி அறிவியல் தேர்வில் வெற்றி பெற்ற பரணிதரன், அதன் மூலம் அமெரிக்காவிலுள்ள நாசா விண்வெளி ஆய்வு மையம் செல்ல தகுதி பெற்றுள்ளார். நாசாவில் நடத்தப்படும் மற்றொரு சர்வதேச விண்வெளி அறிவியல் போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம், ஃபுளோரிடா பல்கலையில் உயர்கல்வி கற்க வாய்ப்பு கிடைக்கும் என்கிறார் பரணிதரன்.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பரணிதரன், நாசா சென்று வர தமக்கு போதிய பொருளாதார வசதி இல்லை என்றும் அரசோ, தனியார் அமைப்புகளோ உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments