உலகளவில் 56 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

0 1107

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 லட்சத்து 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

அமெரிக்காவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 17 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், உயிரிழப்பு 99 ஆயிரத்தை கடந்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பிரேசிலில் 3 லட்சத்து 75 ஆயிரத்தையும், ரஷ்யாவில் 3 லட்சத்து 60 ஆயிரத்தையும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை தாண்டியுள்ளது.

உலகில் நோய் தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூன்றரை லட்சத்தை (3 லட்சத்து 48 ஆயிரம்) நெருங்கியுள்ள நிலையில், குணமானோரின் எண்ணிக்கை 23 லட்சத்து 85 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுதவிர்த்து உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனாவுக்கு 28 லட்சத்து 75 ஆயிரம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments