கலைஞர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ல் மக்களுக்கு உதவிகள் புரிய தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

0 803

கலைஞர் கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதியன்று தமிழக மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்ய வேண்டுமென, கட்சித் தொண்டர்களை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், ஜூன் 3ஆம் தேதியை நல்ல உதவிகள் செய்ய உகந்த நாளாக மாற்றிக் காட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம், முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்குதல், அரிசி, பருப்பு போன்ற மளிகைப் பொருட்கள் வழங்குதல், காய்கறிகள் வழங்குதல், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி செய்தல் உள்ளிட்ட உதவிகளைச் செய்ய வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த உதவிகளை செய்வதன் மூலமாக கருணாநிதி, எங்கும் நிறைந்து  வாழ்கிறார், எல்லோரையும் வாழ வைக்கிறார் என்பதை நிரூபிப்போம் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments