முகக்கவசத்தில் முகப்படத்தை அச்சிட்டு புதுமை முயற்சி

0 3272

நாமக்கலில் அவரவர் முகங்களை அச்சிட்டு தயார் செய்யப்படும் புதிய வகை மாஸ்குகள் விற்பனைக்கு வந்துள்ளன.

முகக்கவசம் அணிந்தவர்களை எளிதில் அடையாளம் காண்பது சிரமமாக உள்ளது. இதன் காரணமாக, நாமக்கலில் ஸ்டுடியோ ஒன்றில், முகக்கவசம் அணியும் போது மறையும் பகுதியை மட்டும் தனியாக காட்டன் துணியில் அச்சிட்டு முகக்கவசம் தயாரிக்கப்படுகிறது.

இந்த வகை மாஸ்குகள் நல்ல வரவேற்பை பெற்றுதாக ஸ்டுடியோ உரிமையாளர் தெரிவித்துள்ளார். ஒரு முகக்கவசம் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments