எல்லை கட்டுப்பாடு கோட்டு பகுதி நெடுகிலும் பாக். படையினர் அத்துமீறி தாக்குதல்

0 818
எல்லை கட்டுப்பாடு கோட்டு பகுதி நெடுகிலும் பாக். படையினர் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாடு கோட்டு பகுதி நெடுகிலும் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

பாலாகோட் செக்டாரில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு பகுதி நெடுகிலும் பாகிஸ்தான் படையினர் இன்று அதிகாலை முதல் சிறிய ரக பீரங்கிகள் உள்ளிட்டவற்றால் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கு அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் அங்கு இருதரப்புக்கும் இடையே சண்டை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சண்டையில் இருதரப்பிலும் உயிரிழப்பு எதுவும் நேரிட்டதா என்பது குறித்து அந்தத் தகவல்கள் எதுவும் தெரிவிக்கவில்லை

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments