உற்பத்திப் பணிகளை இன்று முதல் மீண்டும் தொடங்கும் Toyota

0 1230
உற்பத்திப் பணிகளை இன்று முதல் மீண்டும் தொடங்கும் Toyota

டொயோட்டா நிறுவனம் உற்பத்திப் பணிகளை இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.

கர்நாடக மாநிலம் பிடதியில் (Bidadi) நகரில் உள்ள அதன் தொழிற்சாலையில் பணிகள் தொடங்கும் நிலையில் மத்திய, மாநில அரசுகளின் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி முதல் படிப்படியாக பணிகள் தொடங்கவுள்ளதாகவும் மாறும் சூழல்களுக்கு ஏற்ப பணிகள் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடு முழுதும் 290 முகவர்களும் 230 பணிமனைகளும் பணிகளை மீண்டும் தொடங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பணிகளைத் தொடங்குவதற்கு முன் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்தியுள்ளதாகவும், தொழிலாளர்களின் உடல் மற்றும் மன நலனுக்கு பாதிப்பு ஏற்படாத சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments