தந்தையின் ஸ்மார்ட் போனில் YouTube பார்த்ததால் கொலைகாரனான சிறுவன்..! சிறுமி கொலை பின்னணி

0 22378

திருச்சி மணப்பாறை அருகே பூப்பறிக்க சென்ற 3 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்ததாக 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தந்தையின் செல்போனில் ஆபாச படங்களை பார்த்த சிறுவனால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வீரப்பூர் கிராமத்தின் அருகே பூப்பறிக்க சென்ற 9 வயது சிறுமியை காணவில்லை என்று பெற்றோர் தேடினர். அங்குள்ள மல்லிகை தோட்டத்தின் ஒரு பகுதியில் தலையில் பலத்த காயத்துடன் சிறுமி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அவர் அருகில் பெரிய கல் ஒன்றும் அதில் சிறுவர்கள் அணியும் சட்டை ஒன்றும் சுற்றப்பட்டிருந்தது. உடனடியாக சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இரவு பரிதாபமாக பலியானாள்.

இந்த சம்பவம் குறித்து விசாரணையை முன்னெடுத்த போலீசார் கல்லுடன் சுற்றப்பட்டிருந்த ரத்தக்கறை படித்த சட்டையை வைத்து விசாரணையை முன்னெடுத்தனர். அதே ஊரை சேர்ந்த 14 வயது சிறுவனின் சட்டை என்பதை கண்டறிந்து அவனை பிடித்து விசாரித்த போது சிறுமி கொலைக்கான மர்மம் விலகியது.

அந்த சிறுவனின் தந்தை செல்போனில் சமூக வலைதளங்களிலும், யுடியூப்பிலும் , ஆபாச படங்களை பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அவர் பார்த்து விட்டு செல்போனை வைத்து சென்ற பின்னர் அவருக்கு தெரியாமல் அந்த சிறுவன் பார்க்க கூடாத காட்சிகளை எல்லாம் பார்த்து மனரீதியாக தவறான செய்கைக்கு உந்தப்பட்டுள்ளான்.

ஒரு கட்டத்தில் சிறுவன், சிறுமிக்கு முத்தம் கொடுப்பது போன்ற காட்சியை செல்போனில் பார்த்து விட்டு அந்த காட்சிகளை நிஜத்தில் செயல்படுத்த விபரீத ஆசை தோன்றியுள்ளது. தன்னை விட வயது குறைந்த, தனது வீட்டின் அருகில் வசிக்கும் 3 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை பயன்படுத்த திட்டமிட்டு உள்ளான். அதன்படி சம்பவத்தன்று அந்த சிறுமி தனியாக தோட்டத்திற்கு செல்வதை நோட்டமிட்டு இவனும் பின் தொடர்ந்து சென்றுள்ளான்.

அங்கு ஆட்கள் யாரும் இல்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்டு, அந்த சிறுமியிடம் அத்துமீறியுள்ளான். இதனால் அதிர்ந்து போன சிறுமி தனது தாயிடம் சொல்லபோவதாக கூறி அழுது கொண்டே சென்றுள்ளார்.

இதனால் செய்வதறியாது திகைத்து போன சிறுவன் மற்றொரு படத்தில் பார்த்தது போல கல்லை எடுத்து சிறுமியின் தலையில் அடித்துள்ளான். இதில் நிலைகுலைந்த சிறுமி ரத்தகாயத்துடன் மயங்கி விழுந்து உயிருக்கு போராடி உள்ளாள். அப்போது சிறுமியை தாங்கிப்பிடித்துள்ளான்.

இதில் அவனது சட்டை முழுவதும் ரத்தகறை படிந்ததால் சட்டையை கழற்றி கல்லுடன் சுற்றி மண்ணில் புதைத்து வைத்து விட்டு அங்கிருந்து தப்பியுள்ளான். என்று சுட்டிக்காட்டுகின்றனர் காவல்துறையினர்

 ஒரு தந்தையின் தவறான செல்போன் பழக்கம், அவரது மகனை கொலைகாரனாக்கி சிறையில் தள்ளியுள்ளது. அத்தியாவசிய தகவல் தொடர்பு தேவைக்கு மட்டும் என்று இருந்த இணைய தேவையை, ஆபாசபடம் பார்ப்பது போன்ற அனாவசிய தேவைக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments