அமெரிக்காவில் ஒரே நாளில் 20634 பேருக்கு புதிதாக கொரோனா

0 2882
அமெரிக்காவில் நேற்று மட்டும் ஒரே நாளில் 20634 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அங்கு நிலைமையை கண்காணித்து வரும் ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் நேற்று மட்டும் ஒரே நாளில் 20634 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அங்கு நிலைமையை கண்காணித்து வரும் ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இவர்களையும் சேர்த்து அமெரிக்காவில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 16,43,246 ஆக உயர்ந்துள்ளது. அதே போன்று நேற்று ஒரே நாளில் 633 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.

இதனால் இறப்பு எண்ணிக்கை 97,720 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் அனைத்து 50 மாநிலங்கள், கொலம்பியா மாவட்டம், இதர அமெரிக்க பகுதிகள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்த அமெரிக்கர்கள் உள்ளிட்ட அனைத்தும் சேர்ந்த புள்ளிவிவரமாகும் இது எனவும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments