கேரளாவில் இன்று மேலும் 53 பேருக்கு கொரோனா தொற்று

0 1577
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் இன்று மேலும் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் இன்று மேலும் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் தொடக்கத்தில் கொரோனா பரவிய போதிலும் இடையே தீவிர நடவடிக்கையால் நோய் தொற்று பரவாமல் தடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக கேரளாவில் மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இன்று மேலும் 53 பேருக்கு கொரோனா உறுதியானதால் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 842ஆக அதிகரித்துள்ளது.

இதில் 520 பேர் மருத்துவ சிகிச்சையில் குணமாகியுள்ளனர். இதுதவிர்த்து மாநிலத்தின் பல இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் 322 பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments