கொரோனா பாதித்தோரில் 67 சதவீதம் பேர் 4 மாநிலங்களை சேர்ந்தவர்கள்

0 754

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 67 சதவீதம் பேர், மகாராஷ்டிரா, தமிழகம், குஜராத், டெல்லி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என மத்திய சுகாதாரத் துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது. அந்த மாநிலத்தில் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அந்த மாநிலத்துக்கு அடுத்து தமிழகம், குஜராத், டெல்லி ஆகிய 3 மாநிலங்கள் மிகவும் அதிக பாதிக்கப்பட்டுள்ளன.

அந்த மாநிலங்களிலும் பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த 4 மாநிலங்களிலும் பாதிப்பு எண்ணிக்கையை மொத்தமாக சேர்த்து கணக்கிட்டால் 89 ஆயிரத்தை தாண்டுகிறது. இந்த எண்ணிக்கையானது, நாட்டில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கையான 1 லட்சத்து 31 ஆயிரத்து 868இல் 67 சதவீதம் ஆகும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments