சிறுதொழில்களுக்கு கடனுதவி- வங்கிகளுக்கு நிதியமைச்சர் வலியுறுத்தல்

0 2685

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு எளிதில் கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுத்துறை வங்கித் தலைவர்களிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளார்.

சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு கடன் வழங்க வேண்டும் என்று பொதுத்துறை வங்கித் தலைவர்களிடம் வலியுறுத்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொழில் செய்வோருக்கு கடனுதவிகள் கிடைப்பதில் எந்த வித தடையும் இருக்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடியின் 21 லட்சம் கோடி ரூபாய் நிதித்தொகுப்பில் சிறுதொழில்களை பாதுகாக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

9 புள்ளி 25 சதவீத வட்டியில் கடன்களை வழங்க முழு உத்தரவாதத்தை மத்திய அரசு ஏற்றுள்ளது. தொழில்துறையினருக்கு கடன்களை வழங்குவது தொடர்பான ஆய்வுக்கூட்டத்தை காணொலி மூலமாக நடத்திய நிர்மலா சீதாராமன், 20 லட்சம் கோடி ரூபாயில் அறிவிக்கப்பட்டிருந்த அனேகமான திட்டங்கள் வங்கிகள் மூலமாக செயல்படுத்தப்பட உள்ளதால் அதற்காக தயாராகும்படியும் வங்கிகளுக்கு உத்தரவிட்டார்.

கடந்த மார்ச் முதல் தேதியில் இருந்து இரண்டு மாத ஊரடங்கு காலத்திலும் வங்கிகள் சிறு தொழில்களுக்காகவும் விவசாயத்திற்காகவும் 6 லட்சத்து 68 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டிருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments