அமெரிக்காவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 1,300க்கும் அதிகமானோர் பலி

0 1604
அமெரிக்காவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 1,300க்கும் அதிகமானோர் பலி

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை மீண்டும் 28 ஆயிரத்தை நெருங்கியதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்துள்ளது.

சீனாவில் பரவத் தொடங்கி, அமெரிக்காவில் மையம் கொண்டுள்ள கொரோனா தொற்றுக்கு உலகம் முழுவதும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 300க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததால், அங்கு பலியானோரின் எண்ணிக்கை 96 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. 27 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவர்களில் கிட்டத்தட்ட 18 ஆயிரம் பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இங்கிலாந்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 5 விழுக்காடு மக்களுக்கு ஆன்ட்டிபாடி சோதனை மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார், மேலும் பெருந்தொற்று குறித்து 20 நிமிடங்களில் முடிவுகளைத் தெரிந்து கொள்ளும் முறைகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவின் வூகான் நகரில் கடந்த 12ம் தேதி வரை 2வது அலைக்காக 30 லட்சம் மக்களுக்கு வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லண்டனில் உள்ள ஹீத்ரு விமானநிலையத்தில் பெருந்தொற்று உள்ளவர்களைக் கண்டறிய தெர்மல் ஸ்கிரீன் முறை அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.அடுத்த மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான எல்லைகளைத் திறக்க இத்தாலி முடிவு செய்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments