ஜூன் 1ம் தேதியில் இருந்து இயக்கப்படும் 200 ரயில்களுக்கு முன்பதிவு தொடங்கியது

0 1845
ஜூன் 1ம் தேதியில் இருந்து இயக்கப்படும் 200 ரயில்களுக்கு முன்பதிவு தொடங்கியது

ஜூன் 1ம் தேதியில் இருந்து இயக்கப்படும் 200 ரயில்களுக்கான ஆன்லைன் முன்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கியுள்ளது.

பல்வேறு தளர்வுகளுடன் 4ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அடுத்த மாதம் 1ம் தேதியில் இருந்து 200 ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்த ரயில்வே அமைச்சகம் அதற்கான அட்டவணையையும் வெளியிட்டது.

அதன்படி ஜூன் 1 முதல் அடுத்த 30 நாட்களுக்கு இயக்கப்படும் ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ரயில் நிலையங்களில் முன்பதிவு கவுண்டர்கள் மூடபட்டுள்ளதால், IRCTC இணையதளப் பக்கம் மற்றும் செல்போன் செயலி மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

ஆர்.ஏ.சி மற்றும் காத்திருப்பு பட்டியல் இடம்பெற்றுள்ள நிலையில், தட்கல் முறையில் முன்பதிவு செய்யவும், முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை வழங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது. அதாவது உறுதிப்படுத்தப்பட்ட முன்பதிவு டிக்கெட் இருந்தால் மட்டுமே பயணிக்க முடியும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments