”தேசிய தேர்வு பயிற்சி” எனப்படும் National Test Abhiyas செயலி அறிமுகம்

0 1478
”தேசிய தேர்வு பயிற்சி” எனப்படும் National Test Abhiyas செயலி அறிமுகம்

நீட், ஜே.இ.இ ((JEE)) தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மாதிரித் தேர்வுகளை எழுதி பயிற்சி பெறுவதற்காக National Test Abhiyas என்ற செல்போன் செயலியை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிமுகம் செய்துள்ளது.

ஊரடங்கால், பயிற்சி மையங்களுக்கு சென்று நுழைவுத்தேர்வுகளுக்கு மாணவர்கள் பயிற்சி மேற்கொள்ள இயலாத நிலையில், நுழைவுத்தேர்வுக்கான பயிற்சிகளை வழங்க அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலியை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிமுகம் செய்து வைத்தார்.

அனைத்து வகை செல்போன்கள் மற்றும் கணினியில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக NTA செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. செயலியை பதிவிறக்கம் செய்த பின், அதில் கேட்கப்பட்டுள்ள அடிப்படை விவரங்களைப் பூர்த்தி செய்து, தாங்கள் எதிர்கொள்ளவிருக்கும் நுழைவுத்தேர்வுக்கான மாதிரி தேர்வுகளை இலவசமாக எழுதி பயிற்சி பெற வேண்டும். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments