கட்டுக் கட்டாக கைப்பற்றப்பட்ட கள்ளநோட்டுகள்..கும்பலுக்கு மூளையாக செயல்பட்டவன் கைது

0 4304

தமிழகத்தில் கள்ளநோட்டு கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட குமரி மாவட்ட இளைஞரைக் கைது செய்துள்ள போலீசார், அவரது வீட்டில் கட்டு கட்டாக அடுக்கி வைத்திருந்த 65 லட்ச ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மூங்கிதான்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் அந்த பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் 200 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மதுபானங்கள் வாங்கினார். அப்போது அந்த ரூபாய் நோட்டுகள் மீது கடை மேற்பார்வையாளர் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் வந்து அந்த நோட்டுகளை பரிசோதனை செய்தபோது அவை கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்ததையடுத்து சந்தோஷ்குமார் கைது செய்ய்யப்பட்டார். தொடர்ந்து சந்தோஷ்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருமயத்தை சேர்ந்த முகமது இப்ராஹிம், முகமது நசுருதீன், ராமச்சந்திரன், சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் இந்த கள்ள நோட்டு கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட போலீஸார் உதவியுடன் புத்தேரி பகுதியைச் சேர்ந்த மணிகண்டனை, தனிப்படை கைது செய்தனர். அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் 64 லட்சத்து 91 ஆயிரத்து 740 கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு ஒரு பக்கத்தில் மட்டும் அச்சடிக்கப்பட்ட 3 லட்சம் கள்ள நோட்டுகளும் சிக்கியது. தொடர்ந்து ஜெராக்ஸ் எடுக்கும் இயந்திரம், லேப்டாப் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மணிகண்டன் சென்னையில் பொருட்காட்சிகள் நடத்துவதற்கு ஒருங்கிணைக்கும் பணிகளை செய்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. கொரோனா காரணமாக தொழில் எதுவும் இல்லாததால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குமரி மாவட்டம் வந்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்தபடி நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து அதனை தமிழகம் முழுவதும் உள்ள தனது நண்பர்கள் மூலம் பரப்பியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்திருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments