ஆந்திராவில் ஆகஸ்டு-3ல் பள்ளிகள் திறக்கப்படும் - முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி

0 4267
ஆந்திராவில் ஆகஸ்டு-3ல் பள்ளிகள் திறக்கப்படும் - முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவில் ஆகஸ்டு 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஆந்திர பிரதேச முதலமைச்சர் அலுவலகத்தில், பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. பின்னர் பேசிய அவர், வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்படும் என்றார்.

மேலும், ஆந்திராவில் வணிக வளாகங்கள், திரையரங்குகள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றைத் திறப்பதற்கான தடை தொடரும் என்றும் அவர் கூறினார். கொரோனா தொற்று குறைவாக உள்ள பகுதிகளில், கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments