ஊரடங்கின் போது பொதுமக்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் - உயர்நீதிமன்றம்

0 1367
ஊரடங்கின்போது பொதுமக்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்றும், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கின்போது பொதுமக்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்றும், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கறிஞர் ரவி தொடுத்த பொதுநல வழக்கில் இன்றியமையாத் தேவைகளுக்காக வெளியில் செல்லும் பொதுமக்களைத் துன்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், அனிதா சுமந்த் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாகத் தமிழக டிஜிபி, காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையை வழங்கினர்.

4 லட்சத்துக்கு மேலான வழக்குகள் பதிந்து, ஒரு லட்சத்து 59 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதாகவும், மூன்று லட்சத்து 79 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் 5 கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments