சென்னை கோடம்பாக்கம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது

0 2391

சென்னையில் ராயபுரம் மண்டலத்தை தொடர்ந்து, கோடம்பாக்கம் மண்டலத்திலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளின் அடிப்படையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் சென்னையில், நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் முதலிடத்தில் உள்ள ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 1,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து கோடம்பாக்கம் மண்டலத்திலும் 1,041 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 2 மண்டலங்களில் மட்டுமே தலா ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னையில் மொத்தமாக 6,750 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் 1,498 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 53 பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள 5,167 பேருக்கு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments