கொரோனா பாதிப்புகளால் இந்தியாவில் 13.5 கோடி வேலையிழப்பர்:ஆய்வு அறிக்கை

0 1768
கொரோனாவால் நேரிடும் பாதிப்புகளால் இந்தியாவில் 13 கோடி பேர் வேலைவாய்ப்புகளை இழப்பர் எனவும், 12 கோடி பேர் வறுமையில் தள்ளப்படுவர் எனவும் ஆய்வுத்தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

கொரோனாவால் நேரிடும் பாதிப்புகளால் இந்தியாவில் 13 கோடி பேர் வேலைவாய்ப்புகளை இழப்பர் எனவும்,  12 கோடி பேர்  வறுமையில் தள்ளப்படுவர் எனவும் ஆய்வுத்தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

ஆர்தர் டி லிட்டில் எனப்படும் சர்வதேச நிர்வாக ஆலோசனை அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 7 புள்ளி 6 சதவீதத்தில் இருந்து 36 சதவீதமாக அதிகரிக்கும், இதனால் 13 கோடிக்கும் மேற்பட்டோர் வேலையிழந்து, வேலையில்லாதோர் எண்ணிக்கை 17 கோடியை தாண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் ஏற்படும் பாதிப்பால் 12 கோடி பேர் வறுமையில் தள்ளப்படுவர் எனவும்  அதில் குறிப்பிடப்ப்டடுள்ளது. இதிலிருந்து மீண்டுவர 10 அம்ச திட்டத்தையும், 2ஆவது கட்ட இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டுமெனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments