ஒஎன்ஜிசி நிறுவன ஆலையில் வாயுக் கசிவு

0 1189

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி அருகே உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான ONGC யில் வாயுக் கசிவு ஏற்பட்டது.

ஆனால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு 95 சதவீதம் கசிவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த ஆலையின் பூமிக்கடியில் உள்ள பைப் லைனில் கசிவு ஏற்பட்டதாகவும் அதன் காரணத்தை ஆராய்ந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 6ம் தேதி விசாகப்பட்டினத்தில் ஏற்பட்ட வாயுக் கசிவால் பலர் மயக்கம் அடைந்து விழுந்த காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மீண்டும் இதுபோன்றதொரு பாதிப்பு ஏற்பட இருந்த நிலையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments