ஊரடங்குக்குப் பின் நாட்டில் முதன்முறையாக அரியானாவில் பேருந்துகள் இயக்கம்

0 2525
ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பின் நாட்டிலேயே முதன்முறையாக அரியானாவில் பேருந்துப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பின் நாட்டிலேயே முதன்முறையாக அரியானாவில் பேருந்துப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க மார்ச் 25 முதல் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில் அரியானா மாநிலத்துக்குள்ளேயே வெளி மாவட்டங்களில் சிக்கித் தவிப்போர் சொந்த ஊருக்குச் செல்ல வசதியாக வெள்ளிக்கிழமை முதல் பேருந்துப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

குளிர்வசதி இல்லாத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்காக 52 பேரை ஏற்றிச் செல்ல இடவசதி கொண்ட பேருந்தில் 30 பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

இந்தப் பேருந்துகள் சேருமிடம் தவிர இடையில் வேறெங்கும் நிற்காது. வெள்ளியன்று 8 பணிமனைகளில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் மொத்தம் 196 பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதேபோல அரியானாவில் 35ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ள நிலையில் அவற்றில் பெரும்பாலானவை இயங்கத் தொடங்கியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments