இன்று மாலை உருவாகிறது புயல்... தீவிர புயலாக மாற வாய்ப்பு

0 4543
வங்கக் கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி, வரும் 18ஆம் தேதிக்குப் பிறகு மேற்குவங்கக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. ஒடிசாவில் இருந்து தெற்கே 1100 கிலோமீட்டர் தொலைவிலும், மேற்குவங்க கடலோரத்தில் இருந்து தெற்கே 1250 தொலைவிலும் வங்கதேசத்தில் இருந்து தெற்கு-தென்மேற்கே 1330 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை புயலாக வலுப்பெற்று, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறக்கூடும். தொடக்கத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 17ஆம் தேதிக்குப் பிறகு வடக்கு-வடகிழக்காக திசைமாறி 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதிக்குட்பட்ட காலகட்டத்தில் மேற்குவங்கக் கடலோரத்தை நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் சின்னம் காரணமாக, அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் இன்று பரவலாக மழையும் ஆங்காங்கே கனமழையும் பெய்யக் கூடும், அடுத்தடுத்த நாட்களில் ஒடிசா, மேற்குவங்கப் பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்யக் கூடும்.

சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், இன்றும் நாளையும் தென் வங்கக் கடல் பகுதிக்கும், நாளை மற்றும் நாளை மறுநாள் மத்திய வங்கக் கடல் பகுதிக்கும் வரும் 19 மற்றும் 20ஆம் தேதிகளில் வடக்கு வங்கக் கடல் பகுதிக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒடிசா, மேற்குவங்கம் மற்றும் வங்கதேசத்தை ஒட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு 18 முதல் 20ஆம் தேதி வரை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments