மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு

0 889

மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக மகாராஷ்டிர அமைச்சர் சுபாஷ் தேசாய் தெரிவித்துள்ளார்.

ஞாயிறன்று ஊரடங்கு முடிய உள்ள நிலையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அமைச்சர்களுடன் கலந்துரையாடினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய், மும்பை, தானே, புனே, மாலேகான், அவுரங்காபாத் ஆகிய நகரங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.

மக்களின் நலம்தான் முதன்மையானது என்றும், அதன்பிறகுதான் தொழில், பொருளாதாரம் எல்லாம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஏற்கெனவே மும்பைக்குச் சிறப்புப் பொருளாதார உதவி வழங்க மத்திய அரசிடம் கோரியுள்ளதாகத் தெரிவித்த அவர், பொருளாதாரச் செயல்பாடுகளை விரைவுபடுத்தப் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments