விவசாயிகளின் அனைத்து வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்க - மு.க.ஸ்டாலின்

0 2271
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 3 மாதங்களுக்கு தலா ரூ.5,000 வழங்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

விவசாயிகளின் அனைத்து வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்வதோடு,  புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாயும்,  நடைபாதை வியாபாரிகளுக்கு 10,000 ரூபாயும் நேரடி பண உதவி வழங்கிடுமாறு மத்திய அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  வலியுறுத்தியுள்ளார்.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது” என்பதைப் பிரதிபலிக்கும் வகையிலேயே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின்  இரண்டாவது நாள் அறிவிப்பும் உள்ளது என அவர் விமர்சித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலை அறிக்கையில்,  4.14 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்தான் நாட்டில் இருக்கிறார்கள் என்று மத்திய உள்துறை செயலாளரே கூறியிருக்கும் போது - நிதியமைச்சர் ரேசன் வழங்குவதால் எப்படி 8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்பது புலப்படவில்லை? ஏன் இத்தகைய முரண்பாடு? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

பேரிடர் நேரத்திலும் வழக்கம் போல் “பகட்டு அறிவிப்புகளை” வெளியிட்டு “பாலிடிக்ஸ்” செய்வதைத் தவிர்த்து விட்டு, ஏழை எளிய நடுத்தரப் பிரிவு மக்களைக் காப்பாற்றும் நேரடி நிதியுதவி நடவடிக்கைகளில் மத்திய நிதியமைச்சர் உடனடியாக ஈடுபட வேண்டும் என திமுக தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments