விவசாய கூலித் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மின்கம்பத்தில் மோதியதில் 11 பேர் உயிரிழப்பு

0 604

ஆந்திர மாநிலத்தில் விவசாய கூலி தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மின்கம்பத்தில் மோதியதில் 11 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

பிரகாசம் மாவட்டம் மாச்சவரத்தில் வேலை முடிந்து 30க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்களுடன் அதிவேகமாக சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோரமாக இருந்த மின்கம்பத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அப்போது முறிந்து விழுந்த மின்கம்பத்தின் மின்கம்பிகள் டிராக்டரில் இருந்தவர்களின் மீதுபட்டதில் 7 பெண்கள், 3 ஆண்கள், ஓட்டுநர் என மொத்தம் 11 பேர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments