வேகம் காட்டும் கொரோனா.. 82,000ஐ நெருங்குகிறது பாதிப்பு..!

0 1171

இந்தியாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 970ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் அந்நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கையும் 2 ஆயிரத்து 649ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3 ஆயிரத்து 967 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கொரோனா நோய்க்கு 24 மணி நேரத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 970ஆக அதிகரித்துள்ளது. அந்த நோயால் பலியானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 549ஆகவும் உயர்ந்துள்ளது. இதில் நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு 51 ஆயிரத்து 401 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், தமிழகம் 2ம் இடத்திலும், குஜராத் 3ம் இடத்திலும் உள்ளன. முதலிடத்திலுள்ள மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 27 ஆயிரத்து 524ஆக அதிகரித்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை ஆயிரத்து 19ஆக ((1019)) உயர்ந்துள்ளது.

2ம் இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்து 674ஆகவும், பலி எண்ணிக்கை 66ஆகவும் உயர்ந்துள்ளது. 3ம் இடத்திலுள்ள குஜராத்தில் கொரோனா நோயால் 9 ஆயிரத்து 591 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 586 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் மருத்துவ சிகிச்சையில் 27 ஆயிரத்து 920 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். அவர்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 6 ஆயிரத்து 59 பேர் குணமாகியுள்ளதாக மத்திய சுகாதார துறை வெளியிட்ட புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments