சரக்கு வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் 8 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி

0 995

மத்தியபிரதேசம் மாநிலம் குனா என்ற இடத்தில் சரக்கு வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில், 8 புலம்பெயர் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஊரடங்கு காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து சுமார் 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சரக்கு வாகனம் மூலம் தங்களது சொந்த ஊரான உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, குனாவில் இருந்து அகமதாபாத் நோக்கி வந்த பேருந்து சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், 8 புலம்பெயர் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 54 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments