ஊரடங்கால் கர்ப்பிணி மனைவி, குழந்தையை தள்ளுவண்டியில் வைத்து 700 கிலோ மீட்டர் அழைத்து சென்ற தொழிலாளி

0 4092
ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பும்பொருட்டு புலம் பெயர் தொழிலாளி ஒருவர், கர்ப்பமாக உள்ள தனது மனைவி மற்றும் குழந்தையை சிறிய மரவண்டியில் அமர வைத்து 700 கிலோ மீட்டர் அழைத்து சென்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஐதராபாத்தில் பணிபுரிந்து வந்த ராமு, ஊரடங்கு காரணமாக மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு குடும்பத்துடன் நடந்தே செல்ல பயணப்பட்டார்.

ஆனால் கர்ப்பமாக உள்ள மனைவி மற்றும் குழந்தையால் நீண்ட தூரம் நடக்க முடியாததால், வழியில் கிடைத்த பொருட்களை வைத்து தற்காலிக தள்ளுவண்டியை தயாரித்து அவர்களை அதில் அமர வைத்து மத்தியப்பிரதேசத்துக்கு சென்றடைந்தனர். அங்கு அவர்களை மீட்ட போலீசார், உணவு கொடுத்து வாகனம் மூலம் சொந்த ஊர் அனுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments