டாஸ்மாக் தொடர்பான வழக்குகள் இன்று விசாரணை

0 3254

சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள டாஸ்மாக் வழக்குகளை தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று விசாரிக்கிறது.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மதுக்கடைகள் திறக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதித்து கடந்த 6 ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த நிபந்தனைகளை பின்பற்றவில்லை என கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் மூலமாக மட்டுமே மது விற்பனை மேற்கொள்ள வேண்டும், திறக்கப்பட்ட அனைத்து மதுக்கடையையும் மூட வேண்டும் என கடந்த 8 ஆம் தேதி உத்தரவிட்டது.இந்நிலையில், நிலுவையில் உள்ள டாஸ்மாக் தொடர்பான வழக்குகளை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதிகள் வினித் கோத்தாரி, பி.என். பிரகாஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரிக்கிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments