தாராவி பகுதியில் கொரோனா பாதிப்பு 1,000ஐ தாண்டியது

0 1119
மும்பையில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் பகுதியான தாராவியில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மும்பையில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் பகுதியான தாராவியில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிராவும், அதிகம் பாதிக்கப்பட்ட நகரமாக மும்பையும் திகழ்கின்றன. அங்கு தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தாராவியில் நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் அதிகரித்தபடியே உள்ளது.

இன்று மேலும் 66 பேருக்கு கொரோனா நோ.் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் தாராவி பகுதியில் மட்டும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 28ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர்த்து, தாராவி பகுதியில் கொரோனா நோய்க்கு சுமார் 40 பேர் வரை பலியாகியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments