எட்டுத்திக்கும் சுழன்றடிக்கும் கொரோனா.. அதிர்ச்சி தரும் பாதிப்பு..!

0 4929
நாடு முழவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 525 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்குகிறது. 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

நாடு முழவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 525 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்குகிறது. 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 47ஆயிரத்து 480 பேர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒரே நாளில் மட்டும் 3 ஆயிரத்து 525 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆக, 122 பேர் பலி ஆகி விட்டனர். அதேநேரம் 24 ஆயிரத்து 386 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மஹாராஷ்டிராவை பொறுத்தவரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 500 ஐ நெருங்கி விட்டது. குஜராத்தில் 8 ஆயிரத்து 900 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 359 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கி விட்டது. அங்கு, ஒரே நாளில் 20 பேர் பலி ஆனதால், உயிரிழப்பு 106 ஆக உயர்ந்துள்ளது.

ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்து 300 ஐ யும், மத்திய பிரதேசத்தில் 4 ஆயிரத்தையும் நெருங்க, உத்தரபிரதேசத்தில் 3 ஆயிரத்து 700 ஐ நெருங்கி விட்டது.

மேற்கு வங்காளம், ஆந்திரா, பஞ்சாப், தெலங்கானா மாநிலங்களிலும் வைரஸ் தொற்று பாதிப்பு, கணிசமாக உயர்ந்துள்ளது.

கர்நாடகா, ஜம்மு - காஷ்மீர் , பீஹார் , ஹரியானா , கேரளா மற்றும் ஒடிசா என பல்வேறு மாநிலங்களிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிர்ப்பலியும் கணிசமாக உயர்ந்துள்ளன.

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், இந்தியா 12 - வது இடம் வகிக்கிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments