கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் ரஷ்யாவிற்கு இரண்டாம் இடம்

0 659

கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் ரஷ்யா 2ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்து 899 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த நாட்டில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 32 ஆயிரத்து 243 ஆக உயர்ந்துள்ளது.

அங்கு மொத்தம் 43 ஆயிரத்து 512 பேர் குணமடைந்துள்ளனர். 2 ஆயிரத்து 116 பேர் பலியாகியுள்ளனர்.இதைத் தொடர்ந்து உலகளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளை ரஷ்யா பின்னுக்குத் தள்ளியுள்ளது. இந்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கொவ் என்பவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments