50 நாட்களுக்குப் பின் தொடங்கிய பயணிகள் ரயில் சேவை

0 1559
டெல்லியில் இருந்து பயணிகள் ரயில் சேவை தொடங்கியது

சுமார் 50 நாட்களுக்குப் பிறகு டெல்லியில் இருந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு பயணிகள் ரயில் சேவை துவங்கி இருக்கிறது.

சென்னை, திருவனந்தபுரம் உள்ளிட்ட 15 நகரங்களுக்கு 15 ரயில்கள் இருமார்க்கத்திலும் இயக்கப்படுகின்றன. முதல் நாளான இன்று 3 ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சரியாக மாலை 4 மணிக்கு டெல்லியில் இருந்து சட்டிஸ்கர் மாநிலம் பிலாஸ்புருக்கு 1177 பயணிகளுடன் ரயில் புறப்பட்டு சென்றது.

அதனைத் தொடர்ந்து மாலை 4.45 மணிக்கு அசாம் மாநிலம் திருப்ருகருக்கு மற்றொரு ரயில் புறப்பட்டு சென்றது. மேலும் ஒரு ரயில் இரவு ஒன்பதே கால் மணிக்கு பெங்களூரு செல்ல இருக்கிறது. இயக்கப்படும் ரயில்களில் ஏசி பெட்டிகள் மட்டுமே உள்ளன. ராஜ்தானி ரயில்களுக்கு இணையான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆன்லைன் மூலம் மட்டும் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். திங்கட்கிழமை டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் நாளில் 16 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments