லடாக்கிலுள்ள எல்லை கட்டுப்பாடு கோடு அருகே பறந்த சீன ஹெலிகாப்டர்கள்

0 1195

லடாக்கிலுள்ள எல்லை கட்டுப்பாடு கோடு அருகே சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் பறந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், இந்திய விமானப்படை போர் விமானங்கள் அங்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிக்கிம் எல்லை அருகே இருநாட்டு ராணுவத்தினர் இடையே அண்மையில் கைகலப்பு நேரிட்டதில் பலர் காயமடைந்தனர். இதேபோல் கடந்த வாரம் சீன ராணுவ ஹெலிகாப்டர்கள், லடாக்கிலுள்ள எல்லை கட்டுப்பாடு கோடு பகுதி அருகே பறந்ததாகவும், இது கண்டுபிடிக்கப்பட்டதும் அங்கு இந்திய விமானப்படை விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் ஏஎன்ஐ செய்தி (Ani) நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகையில், லடாக்கிலுள்ள எல்லை கட்டுப்பாடு கோட்டு பகுதி அருகே சீன ஹெலிகாப்டர்கள் பறந்தபோதிலும் எல்லை தாண்டி இந்திய பகுதிக்குள் வரவில்லை என குறப்பிட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments