தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

0 3808

10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருச்சி, கரூர், சேலம், தருமபுரி மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொறுத்தவரை வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும்.

திருச்சி, கரூர், சேலம், தருமபுரி மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக கூடும். எனவே, பொதுமக்கள் காலை 11. 30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியில் 4 சென்டி மீட்டர் மழையும், ராமநாதபுரம் கடலாடி பகுதியில் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது

தென்கிழக்கு வங்ககடல் மற்றும் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 48 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments