மாநிலத்திற்குள் வருவதற்கான கெடுபிடிகளைத் தளர்த்தியது கேரள அரசு

0 9320

கேரள மாநிலத்திற்குள் வரும் அண்டை மாநிலத்தவர்களுக்கான கெடுபிடிகளை கேரள அரசு தளர்த்தியுள்ளது. வாளையார் சோதனைச்சாவடி அருகே கேரள மாநிலம் பாலக்காடு செல்லமுயன்ற 300க்கும் மேற்பட்டோர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தையடுத்து தனது கட்டுப்பாடுகளை கேரள அரசு தளர்த்தியுள்ளது.

மாநிலத்துக்குள் வர விரும்புவோர் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பாதிப்பு இல்லாதவர்கள் வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிப்பு இல்லாதவர்கள் தங்களை தாங்களே வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நுண்கிருமி தொற்று பாதிப்புடையவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவார்கள் என்றும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments