அதிர்ச்சி தரும் சென்னை ஒரே நாளில் 509 பேர் கொரோனாவால் பாதிப்பு

0 3235
சென்னையில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 508 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 839 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் ஒருவர் கூட, கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.

சென்னையில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 509 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 839 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் ஒருவர் கூட,கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.

சென்னையில் கடந்த சில நாட்களாகவே, வைரஸ் தொற்றால் பாதிக்கப்படு வோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

இந்த சூழலில், முன் எப்போதும் இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 509 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

இதன்காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 839 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல, கொரோனா காவு வாங்கிய 47 பேரில், 28 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்று சுகாதாரத்துறை வெளியிட்ட மருத்துவ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூரில் 47 பேரும், செங்கல்பட்டில் 43 பேரும் நெல்லை மற்றும் கிருஷ்ணகிரியில் தலா 10 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பெரம்பலூரில் 9 பேரும், காஞ்சியில் 8 பேரும் பாதிக்கப்பட, ராணிப்பேட்டை மற்றும் விழுப்புரத்தில் தலா 6 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது. அரியலூர் மற்றும் மதுரையில் தலா 4 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட னர்,

மொத்தமுள்ள 37 மாவட்டங்களில், 18 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஒருவர் கூட கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை. அதேநேரம், 19 மாவட்டங்களில் கொரோனா, தனது கொடூரத்தை அரங்கேற்றி உள்ளது.

வயது வாரியாக பார்க்கும் போது, 12 வயதுக்கு உட்பட்டோர்களில், 137 சிறுவர்களும் 177 சிறுமிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களில், ஆண்கள் - 4 ஆயிரத்து 255 பேர், பெண்கள் - 2 ஆயிரத்து 80 பேர் , திருநங்கை இருவர் என மொத்தம் 6 ஆயிரத்து 337 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களை பொறுத்தவரை, 503 பேருக்கு, வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments