மீண்டும் கடைகள் திறப்பு வணிகர்கள் நிம்மதி

0 11313
தமிழகத்தில் நாளை திங்கட் கிழமை முதல், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர, மாநிலம் முழுவதும் சாலை ஓர தள்ளு வண்டி கடைகள், டீ கடைகள் மற்றும் எலக்ட்ரிக்கல் கடைகள் உள்பட 34 வகையான கடைகளை திறக்க, அனுமதி வழங்கி, உத்தரவிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நாளை திங்கட் கிழமை முதல், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர, மாநிலம் முழுவதும் சாலை ஓர தள்ளு வண்டி கடைகள், டீ கடைகள் மற்றும் எலக்ட்ரிக்கல் கடைகள் உள்பட  34 வகையான கடைகளை திறக்க, அனுமதி வழங்கி, உத்தரவிடப்பட்டு உள்ளது.  

ஊரடங்கால் வாழ்வாதாரம் முடங்கிய கடை உரிமையாளர்களுக்கு மறு வாழ்வு அளிக்கும் வகையில் தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், எந்தெந்த கடைகளை திறக்கலாம்? என்ற விவரத்தை அறிவித்து உள்ளது.

இதன்படி, டீக்கடைகள், பேக்கரிகள், பூ, பழம், காய்கறி, பலசரக்கு கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனைக்கடைகள், சிமெண்டு, ஹார்டுவேர்ஸ், சானிடரிவேர் விற்பனை செய்யும் கடைகளை திறக்கலாம்.

இதேபோல, மின்சாதன பொருட்கள் விற்பனை, மொபைல் போன் விற்பனை - பழுது நீக்குதல், கணினி விற்பனை, வீட்டு உபயோக எந்திரங்கள் மற்றும் பொருட்கள் விற் பனை, மோட்டார் எந்திரங்கள் விற்பனை, கண் கண்ணாடி ஆகிய கடைகளையும் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

ஏசி வசதி இல்லாத சிறிய ரக நகைக் கடைகள், ஊரக பகுதிகளில் சிறிய ரக ஜவுளி கடைகள், மிக்ஸி, கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள், டிவி விற்பனை - பழுது நீக்கும் கடைகள், பர்னிச்சர் கடை ஆகியவற்றையும் இனி திறக்க முடியும்.

இதுதவிர, சாலை ஓர தள்ளுவண்டி கடைகள், உலர் சலவையகம், கூரியர் - பார்சல் சர்வீஸ், லாரி புக் கிங் ஆபீஸ், ஜெராக்ஸ் கடைகள், இரு சக்கர , 4 சக்கர வாகன விற்பனை மற்றும் பழுது நீக்கும் மையங்கள், நாட்டு மருந்து கடைகள், விவசாய இடு பொருள் - பூச்சி மருந்து விற்பனை கடைகள், டைல்ஸ்,பெயின்ட், எலக்ட்ரிக் கல்ஸ் கடை கள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் விற்பனை, நர்சரி கார்டன்கள், மரக் கடை - பிளைவுட் விற்பனை, மரம் அறுக்கும் மில்கள் ஆகியவைகளும் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரம், முடிதிருத்தகம், ஸ்பா மற்றும் அழகு நிலையங்கள் திறக்க அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடைகளில் குளிர்சாதன வசதி இருந்தால், கடை உரிமையாளர்கள் அதை இயக்க கூடாது என்றும் தமிழ்நாடு அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

தனிநபர் இடைவெளியை கடை பிடித்தல், கிருமி நாசினி தெளிப்பு மற்றும் வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிவது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை, கடை உரிமையாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசுஅறிவுறுத்தி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments